இலங்கை அரசியலில் விரைவில் பாரிய மாற்றம்

Dinesh Gunawardena Ranil Wickremesinghe Sri Lanka Politician
By Thahir Aug 31, 2023 07:24 PM GMT
Thahir

Thahir

எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் சமகால பிரதமர் தினேஷ் குணவர்தனவை நீக்கிவிட்டு வேறு ஒருவரை அந்த பதவிக்கு நியமிக்க மேற்குலக தூதரகம் இரகசிய நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

எனினும் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்படும் தினேஷ் குணவர்த்தனவுக்கு பலம்வாய்ந்த அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாக தெரிய வருகிறது.

இந்த உடன்பாட்டுக்கு பிரதமர் தினேஷ் குணவர்த்தன இணக்கம் தெரிவித்துள்ளதாக அரசியல்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த தூதரகம் தற்போதைய ஜனாதிபதியை அந்த பதவிக்கு நியமிப்பதற்காக ஆதரவு வழங்கியதென குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் கார்பன் வைப்பு தொடர்பான கொள்கையின் கீழ் இலங்கைக்கு 12 பில்லியன் டொலர்கள் கிடைக்க உள்ளது.

இலங்கை அரசியலில் விரைவில் பாரிய மாற்றம் | Sri Lanka Political Situation Today

எரிக் சொல்ஹெய்

இது முன்னாள் நோர்வே சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்மின் உதவியுடன் பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பணத்தில் ஜனாதிபதி தேர்தல் அல்லது பொதுத் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.