மது விருந்து ஏற்பாடு செய்த மாணவர்கள் குழு! பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை

By Chandramathi Mar 31, 2024 11:57 PM GMT

வெலிமடை பகுதியில் பயிற்சி வகுப்புகளுக்கு செல்வதாக கூறிவிட்டு ​​மது விருந்துக்கு ஏற்பாடு செய்த பாடசாலை மாணவர்கள் குழுவொன்றை வெலிமடை பொலிஸார் பொறுப்பேற்றுள்ளனர்.

குறித்த பாடசாலை மாணவர்கள் குழு, கைவிடப்பட்ட கட்டடமொன்றில் மதுபான விருந்து ஏற்பாடு செய்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமையவே இந்த சுற்றிவளைப்பு மேற்றக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை

இதன்போது 05 பாடசாலை மாணவர்களும், 2 மாணவிகளையும் பொலிஸார் பொறுப்பேற்றுள்ளனர்.

மது விருந்து ஏற்பாடு செய்த மாணவர்கள் குழு! பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை | Sri Lanka Police Arrested The Student

அதிக விலைக்கு விற்கப்படும் மதுபானத்தை இந்த பாடசாலை மாணவர்கள் அப்போது அருந்திக்கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவர்கள் அந்த கட்டடத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிமடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.