போலி கடிதம் தொடர்பில் பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Sri Lanka Police Sri Lanka Deshabandu Tennakoon
By Aadhithya Jul 02, 2024 11:52 AM GMT
Aadhithya

Aadhithya

சமூக ஊடகங்களில் வெளிவரும் போலி கடிதம் தொடர்பில் விசேட அறிவிப்பை பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ளது. 

குறித்த கடிதம் மஞ்சள் பின்னணியில் நீல நிற பொலிஸ் கையொப்பத்துடன் பொலிஸ் உத்தியோகபூர்வ சின்னத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பொலிஸ் மா அதிபர்

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், 2024ஆம் ஆண்டு ஜூலை 01ஆம் திகதி வெளியிட்டதாக தோன்றும் வகையில் இந்த கடிதம் ஆங்கிலத்தில் காணப்படுகிறது.

போலி கடிதம் தொடர்பில் பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Sri Lanka Police About Fake Letter On Social Media

எனினும்  இக்கடிதமும் அதன் உள்ளடக்கமும் முற்றிலும் போலியானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை பொலிஸாரோ அல்லது அதனுடன் இணைந்த நிறுவனங்களினாலோ இவ்வாறான கடிதம் எதுவும் வெளியிடப்படவில்லை எனவும், இந்த கடிதத்தால் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் எனவும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் போலி கடிதம் மற்றும் இணையத்தில் கடிதம் பிரசுரம் செய்யப்பட்டமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், சம்பந்தப்பட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.  

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW ! 

Gallery