இலாபத்தில் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் : எரிபொருள் விலை குறையும் சாத்தியம்

Dollar to Sri Lankan Rupee Ceylon Petroleum Corporation Economy of Sri Lanka Petrol diesel price
By Madheeha_Naz Jun 26, 2023 07:15 AM GMT
Madheeha_Naz

Madheeha_Naz

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் கடந்த ஐந்து மாதங்களில் அறுபது மில்லியன் ரூபாய் இலாபத்தை ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக எதிர்காலத்தில் எரிபொருளின் விலையை குறைக்க நடவடிக்கை எடுப்போம் என்று கூட்டுத்தாபன முகாமைத்துவப் பணிப்பாளர் அட்மிரல் ரவீந்திர விஜே குணரத்ன தெரிவித்துள்ளார்.

பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், கடந்த ஐந்து மாதங்களில் மாத்திரம் அறுபது மில்லியன் ரூபாய் இலாபத்தை ஈட்டியுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

இலாபத்தில் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் : எரிபொருள் விலை குறையும் சாத்தியம் | Sri Lanka Petroleum Corporation And Petrol Price

எரிபொருள் விலை

மேலும் பெற்றுக்கொள்ளப்பட்ட இலாபத்தை எதிர்காலத்தில் மக்களுக்கு வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த இலாபத்தை பெறுவதற்கு முக்கிய காரணம் மாநகராட்சியில் திறமையின்மை மற்றும் முறைகேடுகளை தவிர்க்கும் திறனே காரணம் என நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW