சீன உளவு கப்பலுக்கு அனுமதி கிடையாது: இலங்கை அரசு திட்டவட்டம்
சீன உளவு கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று இலங்கை தற்போது அறிவித்துள்ளது.
இந்தியாவுக்கு பல்வேறு வகைகளிலும் சவாலாக திகழும் சீனா தனது அதிநவீன படைகள் மூலம் இந்தியாவை உளவு பார்க்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றது.
அந்த வகையில் சீன நவீன உளவு கப்பல்களில் ஒன்றான ஷீ யான்-6 என்ற கப்பல் கடந்த வாரம் இந்திய பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்துள்ளது.
சீன உளவு கப்பல்
இதன் போது தமிழகத்தின் அருகே வரும் இந்த அபாயத்தை உணர்ந்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இலங்கையுடன் நடத்திய பேச்சுவார்தையில் சீன உளவு கப்பல் வருகை பற்றி இலங்கை ஆய்வு மேற்கொண்டுள்ளது.
இந்த நிலையில் அடுத்த மாதம் கொழும்பு துறைமுகத்துக்கு வர திட்டமிட்டப்பட்டிருந்த சீன உளவு கப்பலுக்கு இலங்கை அரசு அனுமதி மறுத்துள்ளது.
மேலும் இந்தியாவின் பாதுகாப்பினை கருத்திற்கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலிசப்ரி இந்த தகவலை உறுதிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.