சஜித்திற்கு ஆதரவு வழங்கியது குறித்து விளக்கமளித்த ரிஷாட் பதியுதீன்
கட்சியின் நிறைவேற்றுக் குழு ஆதரவாளர்களை மாவட்ட ரீதியாக சந்தித்த போது அதிக பட்ச ஆதரவு சஜித்துக்கே இருந்ததால் முடிவுகளை மேற்கொண்டோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
கிண்ணியாவில் இன்றையதினம் (24) கட்சி பிரமுகர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்தார்.
ஜனாதிபதி தேர்தல்
இந்தநிலையில், உள்ளூராட்சி மன்ற தேர்தல் தீர்ப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த ரிஷாட் இது நியாயமான வேலை அல்ல. ஜனநாயகத்தை மீறுகின்ற செயல். அது கடந்த அரசாங்கத்தால் செய்யப்பட்டதோடு தவறை திருத்துமாறும் கண்டித்து நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆகவே ஜனாதிபதி தேர்தலின் பின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடாத்துவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது என்றார்.
இதேவேளை, ஹக்கீம் மற்றும் ஹலீமுக்கு எதிராக கண்டியின் பல பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |