ரவூப் ஹக்கீம் தேர்தல் பிரசாரத்தில் எதிர்ப்பு தெரிவித்த இளைஞர்கள்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றும் போது இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டுள்ளமை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அக்குறணையில் நேற்று (23) நடைபெற்ற கூட்டத்தில் இந்த எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும்,குறித்த பிரசார கூட்டத்தில் ரவூப் ஹக்கீம் உரையாற்றும்போது இடை நடுவே குறுக்கிட்டு இளைஞர்கள் கூச்சலிட்ட காணொளியானது சமூக ஊடகங்களில் தற்போது பேசு பொருளாகியுள்ளது.
ஜனாதிபதி தேர்தல்
இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா கட்சியின் தீர்மானத்துக்கு, எதிராக செயற்பட்டமை தொடர்பில் ஒருவார காலத்துக்குள் அவர் பதிலளிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, அவர் வழங்கும் பதிலை அடிப்படையாகக் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளதோடு இலங்கை ஜனாதிபதி தேர்தல் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |