பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு சில நாடுகள் அதிருப்தி: ஜிஎஸ்பி பிளஸ் சலுகைகளை இழக்கும் அபாயம்..!

European Union United States of America Economy of Sri Lanka Sri Lanka Prevention of Terrorism Act
By Fathima Apr 22, 2023 07:45 AM GMT
Fathima

Fathima

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகள் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள நிலையில், இலங்கை ஜிஎஸ்பி பிளஸ் வர்த்தக சலுகைகளை இழக்கும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தின் ஐரோப்பிய வெளி நடவடிக்கை சேவையின் துணை நிர்வாக இயக்குனர் பொவ்லா பொம்பலோனி, புதிய யோசனைக்கு அதிருப்தியை வெளிப்படுத்தி இலங்கை வெளியுறவு அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு சில நாடுகள் அதிருப்தி: ஜிஎஸ்பி பிளஸ் சலுகைகளை இழக்கும் அபாயம்..! | Sri Lanka Losing Gst Plus Anti Terrorism Bill

அமெரிக்கா  அதிருப்தி

புதிய சட்டமூலத்தின் உள்ளடக்கம் தொடர்பில் அமெரிக்கா தனது அதிருப்தியை வோஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க ஊடாகத் தெரிவித்துள்ளது.

மேலும், இந்தச் சட்டமூலம் மாற்றப்படாவிட்டால் முன்னுரிமை வர்த்தகம் மூலம் வர்த்தக உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என இலங்கை வெளியுறவுச் செயலாளர் அருணி விஜேவர்தனவிடம் இங்கிலாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு சில நாடுகள் அதிருப்தி: ஜிஎஸ்பி பிளஸ் சலுகைகளை இழக்கும் அபாயம்..! | Sri Lanka Losing Gst Plus Anti Terrorism Bill

இதனை தவிர, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் சில பிரதிநிதிகளும் இது தொடர்பில் தமது எதிர்ப்பை காட்டியுள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.