இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சர்வதேச சமூகம் நம்பிக்கை : வெளியான தகவல்

Shehan Semasinghe Sri Lanka Politician Sri Lanka Current Political Scenario
By Shalini Balachandran Jul 03, 2024 01:17 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சர்வதேச சமூகம் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் ஆனால் இலங்கையில் உள்ள சில தரப்பினர் தமது அரசியல் இலக்குகளுக்கு அதனை நம்பிக்கையுடன் பார்க்க மறுத்துவிட்டதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை அதிபர் ஊடக மையத்தில் இன்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இது ஒரு நாடு என்ற வகையில் மிகவும் வருந்தத்தக்க விடயம் என்பதைக் கூற வேண்டும்.

கடன் மறுசீரமைப்பு

இது தொடர்பான புரிதல் இல்லாத காரணத்தால் தான் நாம் செய்த பணிகள் குறித்து சில தரப்பினர் இவ்வாறு கூறுகிறார்கள் என்றுதான் முதலில் நினைத்தோம்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சர்வதேச சமூகம் நம்பிக்கை : வெளியான தகவல் | Sri Lanka Is A Leader In Debt Restructuring

ஆனால், அந்த கருத்துகள் குறுகிய அரசியல் நோக்கங்களால் கூறப்பட்டவை என்பது இப்போது தெளிவாகிறது.

அரசியலையும் மற்றும் பொருளாதாரத்தையும் கலந்து நாட்டின் முன்னேற்றத்தை சீர்குலைப்பவர்களின் நிலை எவ்வாறு இருக்கின்றது என்பது குறித்து மக்கள் தெளிவாக இருக்க வேண்டும்.” என அவர் தெரிவித்துள்ளார்.

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW