இலங்கைக்கு ஏற்படவுள்ள ஆபத்து குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்
சர்வதேச நடவடிக்கைகள் இலங்கையின் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வரும் இலங்கையின் பொருளாதாரத்திற்கு, சமீபத்திய வெளிநாட்டு அதிர்ச்சிகளும் செயற்பாடுகளும் நிச்சயமற்ற தன்மையை உருவாக்குவதாக சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
உலகளாவிய தாக்கத்தை மதிப்பிடுவதற்கும், சர்வதேச நாணய நிதியம் ஆதரிக்கும் திட்டத்தில் இலங்கை அதன் தாக்கத்தை எவ்வாறு குறைக்க முடியும் என்பதையும் மதிப்பிடுவதற்கு அதிக நேரம் தேவை என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் சீர்திருத்த நிகழ்ச்சி நிரல்
சர்வதேச நாணய நிதியத்தின் மூத்த தூதுக்குழுத் தலைவர் இவான் பாபகேர்ஜியோ உள்ளிட்ட குழுவினரின் சமீபத்திய இலங்கை விஜயத்தைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் இந்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியால் ஆதரிக்கப்படும் இலங்கையின் சீர்திருத்த நிகழ்ச்சி நிரல் தொடர்ந்து பாராட்டத்தக்க முடிவுகளைத் தருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நெருக்கடி காலத்திற்கு பின்னர் 2024 ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்தை எட்டும் என்பது மகிழ்ச்சி அளிப்பதாக, இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட சர்வதேச நாணய நிதியக் குழு வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |