உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

Colombo Election Local government Election Court of Appeal of Sri Lanka
By Rukshy Apr 11, 2025 07:09 AM GMT
Rukshy

Rukshy

கொழும்பு மாநகரசபை உள்ளிட்ட சில உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் நடத்துவது குறித்த இடைக்கால தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகரசபை உள்ளிட்ட 18 உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல்களை நடத்துவது தொடர்பில் இடைக்கால தடை உத்தரவு பிறக்கப்பட்டிருந்தது.

இன்று வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்படவுள்ள பணம்

இன்று வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்படவுள்ள பணம்

மேன்முறையீட்டு நீதிமன்றம் 

எதிர்வரும் மே மாதம் 6ம் திகதி தேர்தல் நடத்துவதனை தடுக்கும் வகையில் இந்த உத்தரவு முன்னதாக பிறப்பிக்கப்பட்டிருந்தது.

எனினும், குறித்த இடைக்கால தடை உத்தரவினை நீக்குவதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் சற்று முன்னர் அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு | Local Election In Sri Lanka

இந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தாக்கல் செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்களை மீள ஏற்றுக்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சட்ட மா அதிபரினால் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட காரணிகளை கருத்திற் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றின் பதில் தலைவர் மொஹட் லாபர் மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் குழாமினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரிசி இறக்குமதி செய்யப்பட்டமைக்கான காரணம் குறித்து அமைச்சர் விளக்கம்

அரிசி இறக்குமதி செய்யப்பட்டமைக்கான காரணம் குறித்து அமைச்சர் விளக்கம்

தொடரும் மழையுடனான வானிலை

தொடரும் மழையுடனான வானிலை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW