ஜனாதிபதி வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல்

Government Of Sri Lanka Sri Lanka Government New Gazette
By Chandramathi Aug 18, 2023 06:57 AM GMT
Chandramathi

Chandramathi

மின்சாரம், கனியவளம் மற்றும் வைத்தியசாலைகள் என்பனவற்றை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து மீண்டும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் 

ஜனாதிபதி வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் | Sri Lanka Government Gazette 2023

அதன்படி, மின்சார விநியோகம் தொடர்புடைய சகல சேவைகளும், கனியவள உற்பத்தி மற்றும் எரிபொருள் வழங்கல், விநியோகம் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வைத்தியசாலைகள், மருந்தகங்கள், நோயாளர்களின் பராமரிப்பு மற்றும் சிகிச்சை அளித்தல் என்பன அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.