எரிபொருள் ஒதுக்கீடு அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

Fuel Price In Sri Lanka Kanchana Wijesekera Economy of Sri Lanka Sri Lanka Fuel Crisis
By Fathima May 29, 2023 08:56 AM GMT
Fathima

Fathima

அடுத்த மாதம் முதல் எரிபொருள் ஒதுக்கீட்டை இரு மடங்காக அதிகரிக்க முடியும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

வெலிகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

எரிபொருள் ஒதுக்கீடு அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு | Sri Lanka Fuel Crisis In Sri Lanka

மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கான வாராந்த 7 லீட்டர் எரிபொருள் ஒதுக்கீட்டை அடுத்த மாதம் எரிபொருள் விலைத் திருத்தத்தின் போது 14 லீட்டராக அதிகரிக்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். 

மேலும், எரிபொருள் விலை திருத்தத்துடன் எரிபொருள் ஒதுக்கீட்டு திருத்தமும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். 

அந்தவகையில்,

முச்சக்கர வண்டி (சிறப்பு) (Three-wheeler - Special) : 22 லீட்டர்

முச்சக்கர வண்டி (பொது) (Three-wheeler - General) : 14 லீட்டர்

மோட்டார் சைக்கிள் (Motorbike) : 14 லீட்டர்

பேருந்து (Bus) : 125 லீட்டர்

கார் (Car) : 40 லீட்டர்

நில வாகனம் (Land Vehicle) : 45 லீட்டர்

லொறி (Lorry): 125 லீட்டர்

சிறப்பு நோக்க வாகனம் (Special Purpose Vehicle): 45 லீட்டர்

வான் (Van): 40 லீட்டர்