பலர் முன்னிலையில் பைசர் முஸ்தபாவிற்கு கிடைத்த பாராட்டு

Srilanka Freedom Party Nimal Siripala De Silva MP Chamara Sampath Dassanayake
By Fathima Dec 15, 2025 06:15 AM GMT
Fathima

Fathima

சிறிலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகியிருந்த விஜேயதாச ராஜபக்ஷவை கட்சியில் மீள இணைத்துக் கொள்வதற்கு பைசர் முஸ்தபா பெரும் பங்காற்றியதாக அக்கட்சியின் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திர கட்சியின் உயர் மட்டக் குழு கூட்டம், நேற்று அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.

கட்சி கூட்டம்

கட்சியின் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் குறித்த பல நியமனங்கள் வழங்கப்பட்டன.

பலர் முன்னிலையில் பைசர் முஸ்தபாவிற்கு கிடைத்த பாராட்டு | Sri Lanka Freedom Party Meeting

இதன்போது, கூட்டத்தில் உரையாற்றிய கட்சியின் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, பைசர் முஸ்தபாவை பாராட்டினார்.

தொடர்ந்துரையாற்றிய அவர்,விஜேயதாச ராஜபக்ஷவை கட்சியில் மீள இணைத்துக் கொள்வதற்கு பைசர் முஸ்தபா பெரும் பங்காற்றினார்.

தனக்கு வழங்கப்பட்டிருந்த கொழும்பு மாவட்ட அமைப்பாளர் பதவியைக் கூட வழங்குமாறு தெரிவித்தார். அவருக்கு நான் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் கட்சியின் யாப்பு சீர்திருத்தம் செய்யப்பட்டுள்ளது.இதன் சீர்திருத்தத்தை நான் தான் செய்திருக்கிறேன். அது தொடர்பில் உயர் பீடம் ஆராய்ந்து அனுமதி தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.தலைவருக்கு இருந்த சர்வாதிகார பலம் நீக்கப்பட்டுள்ளது.

இந்த கட்சியை கட்டியெழுப்பி எதிர்கால இளைய தலைமுறையினருக்கு வழங்குவதே எனது நோக்கம் என்று தெரிவித்தார்.

பல நியமனங்கள்

சிறிலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளராக சாமர சம்பத் தசநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

பலர் முன்னிலையில் பைசர் முஸ்தபாவிற்கு கிடைத்த பாராட்டு | Sri Lanka Freedom Party Meeting

அத்தோடு கட்சியில் இருந்து விலகியிருந்த விஜேயதாச ராஜபக்ஷ மீண்டும் கட்சியில் இணைத்து கொள்ளப்பட்டு அவருக்கு கொழும்பு மாவட்ட அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டது.

அதற்கு அடுத்தப்படியாக கட்சியில் பிரதித் தலைவராக பைசர் முஸ்தபா நியமிக்கப்பட்டார்.