இலங்கையின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

Sri Lanka Money Export
By Fathima Dec 23, 2025 06:22 AM GMT
Fathima

Fathima

இலங்கையின் ஏற்றுமதித்துறை 5.8% வீத வருடாந்த வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மங்கள விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

2025 ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில், இந்த வளர்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.   

தரவுகள் 

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு | Sri Lanka Export Earnings Increase In November

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் தரவுகள் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் மதிப்பிடப்பட்ட மாணிக்க மற்றும் ஆபரணங்கள் மற்றும் பெற்றோலிய உற்பத்திகளுக்கான ஏற்றுமதி வருமானத்துடன் இணைந்து மொத்த ஏற்றுமதி வருமானம் 15,776.36 மில்லியன் டொலர்கள் ஆக அதிகரித்துள்ளது.

2025 நவம்பர் மாதத்தில் பொருட்கள் மற்றும் சேவைகள் துறைகளின் மொத்த ஏற்றுமதி வருமானம் 1,364.52 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இது 2024 நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 5.56% வருடாந்த வளர்ச்சியாகும்.