தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு
நாட்டில் நிலவும் பொருளாதார சிக்கல் நிலை காரணமாக 2023 இல் தேர்தல் நடைபெறுவது உறுதியற்ற ஒரு விடயம் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,"நாட்டில் உள்ள வீதிகளை புனரமைப்பதற்கு 53 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும். இதற்கான நிதியை ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து இலங்கை இன்னும் பெறவில்லை.
நிதி கிடைக்காது
நாங்கள் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு கடன்களைப் பெற்றுள்ளோம். நாங்கள் அதை திருப்பிச் செலுத்தாததால், யாரும் எங்களுக்கு கடன் கொடுக்க தயாராக இல்லை.
மேலும் இலங்கை தனது கடன் மறுசீரமைப்பு திட்டத்தை அறிவித்தவுடன், நிதி விடுவிக்கப்படும், அதுவரை நிதி கிடைக்காது.
இந்நிலையில் நாட்டில் தேர்தலை நடத்த நிதியை பெற்றுக்கொள்வதென்பது சாத்தியமற்ற விடயம்." என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |