கட்டுப்பாட்டு விலையை விட குறைந்த விலையில் முட்டை விற்பனை! வெளியான தகவல்

Sri Lanka Economic Crisis Sri Lanka
By Fathima Apr 17, 2023 04:42 PM GMT

மே மாதம் முதலாம் திகதி முதல் கட்டுப்பாட்டு விலையை விட குறைந்த விலையில் நுகர்வோருக்கு முட்டைகளை வழங்கவுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனினும் அன்றைய தினம் வரை கட்டுப்பாட்டு விலையில் முட்டைகளை விற்பனை செய்வது கடினம் என அதன் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையில் முட்டைகளை வழங்க இன்னும் இரண்டு வாரங்கள் ஆகும் என அதன் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்பட்ட இந்திய முட்டைகளை சில பேக்கரி உரிமையாளர்கள் நிராகரித்ததன் காரணமாக கடந்த சில நாட்களாக உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Gallery