இலங்கையின் பணவீக்கம் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்

Central Bank of Sri Lanka
By Mayuri Aug 17, 2024 02:19 AM GMT
Mayuri

Mayuri

அடுத்த வருடம் மார்ச் மாதம் வரையில் இலங்கையின் பணவீக்கம் எதிர்பார்த்த இலக்கை விடவும் தாழ்ந்த மட்டத்தில் இருக்கும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

நாணயக் கொள்கை அறிக்கை

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணயக் கொள்கை அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும், மின்சாரம், எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகள் காரணமாக, நாட்டின் பணவீக்கம் எதிர்வரும் 7 மாதங்களுக்கு 5 சதவீதத்திலும் குறைந்த மட்டத்தில் காணப்படும்.

இலங்கையின் பணவீக்கம் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல் | Sri Lanka Economy Current Situation

முதன்மை பணவீக்கம்

சாதகமற்ற புள்ளிவிவரங்களின் விளைவுகளின் அடிப்படையில், அடுத்த வருடம் இரண்டாம் காலாண்டில் முதன்மை பணவீக்கம் தற்காலிக உயர்வொன்றைப் பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஜூலை மாதத்தில் பணவீக்கம் 1.7 சதவீதத்திலிருந்து 2.4 சதவீதமாக அதிகரித்தது.

இலங்கையின் பணவீக்கம் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல் | Sri Lanka Economy Current Situation

இதேவேளை இந்த வருடத்தின் இறுதியில் இலங்கையின் பொருளாதாரம் 3 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW