பொருளாதாரம் மிதமான வளர்ச்சியை எட்டும்: ஆசிய அபிவிருத்தி வங்கி
நாட்டின் பொருளாதாரம் இந்த ஆண்டில் மிதமான வளர்ச்சியை எட்டும் என ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள 2024 ஏப்ரல் மாதத்துக்கான மதிப்பீட்டில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், நாட்டின் பொருளாதாரம் 2 வருட தொடர்ச்சியான வீழ்ச்சியின் பின் இந்த நிலைமையைக் காட்டுகிறது.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி
அதன்படி, இந்த ஆண்டு இலங்கையின் பொருளாதாரம் 1.9 வீத வளர்ச்சியைக் காட்டியுள்ளது. இந்நிலையில், 2025ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரத்தில் 2.5 வீத வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம், இலங்கையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு மற்றும் வெளிநாட்டு பணவனுப்பல்கள் பாராட்டத்தக்க நிலையில் உள்ளது.
இதற்கிடையில், கடினமான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தும் வகையில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் பாராட்டுக்குரியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |