சுற்றுலா ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இலங்கை அணி அறிவிப்பு

Sri Lanka Cricket Sri Lanka Afghanistan Dasun Shanaka
By Fathima May 31, 2023 12:08 AM GMT
Fathima

Fathima

சுற்றுலா ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடருக்கான இலங்கை அணியில் மதீஷ பத்திரண இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

குறித்த போட்டித் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் போட்டி

16 வீரர்களை கொண்ட குழாமின் தலைவராக தசுன் சானக்க நியமிக்கப்பட்டுள்ள நிலையில் உப தலைவராக குசல் மெந்திஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

சுற்றுலா ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இலங்கை அணி அறிவிப்பு | Sri Lanka Cricket Team Afghanistan Team

மேலும், 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு அணிக்கு துமித் கருணாரத்ன மீண்டும் அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த குழாமில் இளம் பந்து வீச்சாளர் மதீஷ பத்திரண இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவர் தனது முதலாவது ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.