சர்வதேச கிரிக்கெட் தடை: 100 மில்லியன் அமெரிக்க டொலர் வருமான இழப்பு
சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி) விதித்துள்ள தடையால் நாடு நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை இழக்கும் நிலையில் உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அத்துடன் அரசியல்வாதிகள் அரசாங்கத்திற்குள் உள்ளக அரசியல் பிரச்சினைகளை தீர்க்க விளையாட்டைப் பயன்படுத்தக் கூடாது என்றும் நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் சபை விதித்துள்ள தடை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் சபை
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், அரசியல்வாதிகள் மற்றும் சர்வதேச கிரிக்கெட் சபை அதிகாரிகளுக்கு இடையில் எவ்வாறான முரண்பாடுகள் எழுந்தாலும் அவை தீர்க்கப்பட வேண்டும்.
இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் அரசியல்வாதிகள் விளையாட்டுக்காகவும் வீரர்களின் மேம்பாட்டிற்காகவும் தங்கள் முரண்பாடுகளை தீர்க்க வேண்டும். முரண்பாடுகளின் விளைவாக பாதிக்கப்படப் போவது இலங்கையின் கிரிக்கெட் தான் என்று அவர் கூறியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி) விதித்துள்ள கிரிக்கெட் தடையால் நாடு நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை இழக்கும் நிலையில் உள்ளது.
விளையாட்டு அமைப்புக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையில் எத்தகைய பிரச்சினைகள் ஏற்பட்டாலும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல்வாதிகள் அரசாங்கத்திற்குள் உள்ளக அரசியல் பிரச்சினைகளை தீர்க்க விளையாட்டைப் பயன்படுத்தக் கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.