சுவீடனில் எரிக்கப்பட்ட குர்ஆன்: இலங்கை கடும் கண்டனம்

Sri Lanka Sri Lanka Government Sweden
By Fathima Jul 03, 2023 07:16 AM GMT
Fathima

Fathima

உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களால் ஈத் அல் அதா கொண்டாடப்பட்டபோது சுவீடனில் உள்ள பள்ளிவாசலுக்கு வெளியே இஸ்லாத்தின் புனித நூலான புனித குர்ஆன் எரிக்கப்பட்டதை இலங்கை கண்டித்துள்ளது.

சுவீடனில் வசிக்கும் ஈராக்கியர் என்று கூறப்படும் சல்வான் மோமிகா என்பவர், ஸ்டொக்ஹோமில் உள்ள மத்திய பள்ளிவாசலுக்கு வெளியே இஸ்லாத்தின் புனித நூலின் பிரதியைப் புதன்கிழமை (28.06.2023) தீ வைத்து எரியூட்டியுள்ளார்.

கருத்துச்சுதந்திரம் என்ற அடிப்படையில் மற்றவர்களின் உரிமைகளும் மதிக்கப்படல்வேண்டும்.

சுவீடனில் எரிக்கப்பட்ட குர்ஆன்: இலங்கை கடும் கண்டனம் | Sri Lanka Condemns Holy Quran Burning In Sweden

மத சகிப்புத்தன்மை

இந்தநிலையில், மதத்தின் அடிப்படையில் பிளவுகள் மற்றும் வெறுப்புகளை உருவாக்குவதற்கு எவருக்கும் உரிமம் வழங்கப்படவில்லை என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எனவே தேசிய மற்றும் சர்வதேச சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தின் நலன் கருதி, சமூகங்களுக்கு இடையில் துருவ முனைப்புக்கு வழிவகுக்கும் மத சகிப்புத்தன்மை மற்றும் வெறுப்பு நடவடிக்கைகளைத் தடுக்க அனைத்து நாடுகளும் தனி ஆட்களும் கடமைப்பட்டுள்ளனர் என்றும் இலங்கை வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.