அதிகரிக்கப்பட்ட வேதனத்தை இரத்துச் செய்வதற்கான சட்டமூலம் கையளிப்பு
Central Bank of Sri Lanka
Parliament of Sri Lanka
Ministry of Finance Sri Lanka
Udaya Gammanpila
By Mayuri
இலங்கை மத்திய வங்கி ஊழியர்களின் அதிகரிக்கப்பட்டுள்ள வேதனத்தை இரத்துச் செய்வதற்கான சட்டமூலமொன்று கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டமூலத்தை நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்றைய தினம் (13.03.2024) நாடளுமன்ற பதில் செயலாளர் நாயகம் ஹங்ச அபேரத்னவிடம் கையளித்துள்ளார்.
கட்டாயமாக்குமாறு முன்மொழிவு
குறித்த சட்டமூலத்தில் மத்திய வங்கி ஊழியர்களின் வேதனத்தை அதிகரிப்பது தொடர்பில் நிதியமைச்சரின் இணக்கப்பாட்டைப் பெறுவது கட்டாயமாக்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 2023ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கி சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம், சட்டமா அதிபரின் பரிசீலனைக்காக சமர்ப்பிக்கப்படும் என நாடாளுமன்ற பதில் செயலாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்திற்கு சர்வதேச நாணயநிதியம் அழுத்தம் கொடுக்க வேண்டும்: மனித உரிமை கண்காணிப்பகம் வலியுறுத்து
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |