நாட்டில் மூடப்படும் பாரிய தொழிற்சாலை: 1000 பேர் வேலை இழக்கும் அபாயம்

Sri Lanka Economic Crisis Sri Lanka Economy of Sri Lanka
By Fathima Sep 11, 2023 09:40 AM GMT
Fathima

Fathima

மினுவாங்கொடையில் அமைந்துள்ள Brandix நிறுவனத்திற்கு சொந்தமான Brandix Incubator தொழிற்சாலையை தற்காலிகமாக மூடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நிறுவனம் மூடப்படுவதால் கிட்டத்தட்ட 1000 பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஆடைத் தொழில் அடிக்கடி வீழ்ச்சி

இதே நிர்வாக உத்தியோகத்தர், முன்னர் Brandix நிறுவனத்திற்குச் சொந்தமான கஹவத்தை மற்றும் வெலிசறையில் அமைந்துள்ள தொழிற்சாலைகளையும் மூடியுள்ளார்.

Brandix நிறுவனம்

இதற்கிடையில், ஆடைத் தொழில் அடிக்கடி வீழ்ச்சியடைந்து வருவதாகவும், குறுகிய மற்றும் நடுத்தர காலத்தில் பெரும் வேலை இழப்பு ஏற்படும் என்றும் Brandix குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அஷ்ரப் உமர் சமீபத்தில் ஊடகங்களுக்கு அறிவித்ததாக தொழில்துறை வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.