இலங்கையில் உள்ள 11 வங்கிகளில் கோடிக்கணக்கான சேமிப்பு பணம் மாயம்

Sri Lankan Peoples Money
By Thahir Sep 04, 2023 06:45 AM GMT
Thahir

Thahir

மஹரகம பல்வேறு சேவைகள் கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான 11 கிராமிய வங்கிகளின் வைப்பாளர்களின் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வங்கிகளின் அதிகாரிகளால் மோசடி செய்யப்பட்டுள்ளதாக வாடிக்கையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

33,000 வைப்பாளர்களின் 105 கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகை மோசடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் உள்ள 11 வங்கிகளில் கோடிக்கணக்கான சேமிப்பு பணம் மாயம் | Sri Lanka Bank Deposit Rates People Investment

பண மோசடி

வைப்பாளர்களின் சுமார் 25 கோடி ரூபாய் கடனாக வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 80 கோடி ரூபாய் வங்கிகளில் இல்லை எனவும் கூறப்படுகிறது.

கடனாக செலுத்திய 25 கோடி ரூபாயில் 17 கோடி ரூபாய் கடன் காலம் முடிவடைந்துள்ளது. பல்வேறு சேவைகள் கூட்டுறவு சங்கத்தின் தலைமையக கட்டிடத்தையும் அடமானம் வைத்து அதன் அதிகாரிகள் மூன்று கோடி 35 இலட்சத்தை கடனாக பெற்றுள்ளதாகவும், மாதிவெல காணியொன்றும் அடமானம் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வங்கி அதிகாரிகள் 7 கோடி ரூபாய் நிரந்தர வைப்புத் தொகையை பிணை வைத்து 7 கோடியே 98 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளதாகவும் அந்த பணத்திற்கு என்ன நடந்தது எனவும் வாடிக்கையாளர்கள் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.