ஜெ. ஸ்ரீ ரங்காவிற்கு பிணையில் செல்ல அனுமதி

Ranil Wickremesinghe Sri Lanka Sri Lanka Anti-Govt Protest
By Fathima May 04, 2023 12:04 AM GMT
Fathima

Fathima

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீடு எரிக்கப்பட்ட சம்பவத்தில் சந்தேகநபராக குறிப்பிடப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்காவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெ. ஸ்ரீ ரங்காவிற்கு பிணையில் செல்ல அனுமதி | Sri Lanka Anti Govt Protest Ranil Wickremesinghe

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களில் ஒருவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ. ஸ்ரீ ரங்கா என குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்துக்கு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த வருடம் ஜீலை 9ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இல்லத்துக்கு அடையாளந்தெரியாத நபர்கள் தீ மூட்டியமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.