நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அநுர விடுத்துள்ள அழைப்பு

Colombo Anura Kumara Dissanayaka Independence Day
By Benat 3 months ago
Benat

Benat

சமூக, பொருளாதார, கலாசார சுதந்திரத்தை முழுமையாக பெற்றுக் கொள்ள நாம் அனைவரும் ஒரே போராட்ட பூமியில் ஒன்றாக இணைந்து போராட வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று காலை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

இதன்போது நாட்டு மக்களுக்கு ஆற்றிய சுதந்திரதின உரையின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


மேலும்,  இம்முறை சுதந்திர தினம் ஒரு சிறப்பு வாய்ந்த நாள் என்றும், சுதந்திரக் கனவை ஒன்றாகக் காண வேண்டும், ஒன்றாக நனவாக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

நாட்டின் வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் உள்ள மக்கள் வளமான ஒரு எதிர்கால அரசையும் நவீன இலங்கை தேசத்தையும் கனவு கண்டு கொண்டிருக்கும் நேரத்தில் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவது சிறப்பு வாய்ந்து என்றும் அவர் குறிப்பிட்டார்.