நாட்டில் தொற்றா நோய்களின் பரவல் அதிகரிப்பு! சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை

Sri Lanka Ministry of Health Sri Lanka Sri Lankan Peoples Sri lanka Food Recipes Economy of Sri Lanka
By Fathima Jun 01, 2023 11:41 PM GMT
Fathima

Fathima

இலங்கையில் தொற்றா நோய்களின் பரவல் அதிகரித்துள்ளதாகவும் பொது மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமெனவும் இலங்கை சுகாதார அமைச்சு அமைச்சின் போஷாக்குப் பிரிவு பணிப்பாளரும் விசேட வைத்திய நிபுணருமான லக்மினி நயனா மகோத ரத்ன எச்சரித்துள்ளார்.

நாட்டில் தொற்றா நோய்களின் பரவல் அதிகரித்துள்ளது.எனவே சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் கட்டுப்பாட்டுடன் உணவு வகைகளை உண்ண வேண்டியது அவசியமானது.

இலங்கையில் உள்ள பெற்றோர் தமது குழந்தைகளின் போஷாக்கு குறித்து அக்கறை கொள்ள வேண்டும் எனவும் எச்சரித்துள்ளார்.

அத்துடன், போக்குவரத்து சமிக்ஞை விளக்குகள் போல உணவு வகைகளைப் பிரித்துக் கொள்ள வேண்டும்.

நாட்டில் தொற்றா நோய்களின் பரவல் அதிகரிப்பு! சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை | Spread Infectious Diseases Childrens Sri Lanka

உணவு வகை

இதனடிப்படையில், பச்சை நிற உணவு வகைகள் ஊட்டச்சத்துகளின் ஆதாரங்கள் என்பதன் அடிப்படையில் சிறந்த தெரிவு மற்றும் மஞ்சள் நிற உணவு வகைகள் ஊட்டச்சத்துகளின் ஆதாரங்கள் அவதானத் தெரிவு.

இதேவேளை, சிவப்பு நிற உணவுகள் கட்டுப்பாட்டுத் தெரிவாக இருக்க வேண்டும்.

சர்க்கரை, உப்பு, கொழுப்பு உணவுகளை உட்கொள்வதில் பொது மக்கள் அதிக அவதானம் செலுத்த வேண்டும்.

குறிப்பாக சந்தையில் விற்கப்படும் குளிர்பானங்கள் ஆபத்தை விளைவிக்கலாம் என கூறியுள்ளார்.