ஹஜ் பெருநாளை முன்னிட்டு புத்தளத்தில் விளையாட்டு போட்டிகள் (Photos)
ஹஜ் பெருநாளை முன்னிட்டு புத்தளத்தில் பல்வேறு வகையான மோட்டார் சைக்கிள் பந்தயப் போட்டிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்த விளையாட்டு போட்டி நிகழ்வானது நேற்றையதினம் (02.07.2023) புத்தளம் - சுப்பர்க்ரோஸ் கலையைக ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த போட்டி நிகழ்வுகள் புத்தளம் - இஜித்துமா மைதானத்தில் இடம்பெற்றதுடன் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் போட்டி நிகழ்வைக் கண்டுகழிப்பதற்கு வருகை தந்திருந்தனர்.
பல்வேறு வகையான போட்டிகள்
இந்நிலையில் பல்வேறு வகையான மோட்டார் சைக்கிள் பந்தயம், மாட்டு வண்டி பந்தயம், மினிக்குப்பர் கார் பந்தயம், குதிரை ஓட்டப்பந்தயம், முச்சக்கர வண்டி பந்தயம் மற்றும் பல்வேறு வகையான பந்தயங்கள் இடம்பெற்றிருந்தன.
குறித்த நிகழ்விற்கு இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பிரதம அதிதியாக வருகைத் தந்ததுடன் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிந்தக அமல்மாயாதுன்ன அவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
பரிசில்கள் வழங்கி வைப்பு
இதேவேளை புத்தளம் பொலிஸ் விஷேட அதிரடிப்படை முகாமின் பொலிஸ் பரிசோதகர் புஷ்பகுமார, மற்றும் நகரசபை செயலாளர் மற்றும் பலர் அதிதிகளாக கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது நிகழ்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அதிதிகளினால் பெறுமதியான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.





