கொழும்பில் பிரபல தனியார் உணவகத்தில் பழுதடைந்த கோழி இறைச்சி: சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை -

Food Shortages KFC Junk Food Fast Food
By Madheeha_Naz Dec 20, 2023 04:59 AM GMT
Madheeha_Naz

Madheeha_Naz

கொழும்பு இராஜகிரியவில் உள்ள பிரபல தனியார் உணவகமொன்றில் பழுதடைந்த கோழி இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த முறைப்பாட்டையடுத்து பொது சுகாதார பரிசோதகர்களினால் அங்கிருந்த கோழி இறைச்சிகள் அழிக்கப்பட்டுள்ளன.

தாம் உட்கொண்ட கோழி இறைச்சியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக வாடிக்கையாளர் ஒருவரிடமிருந்து அப்பகுதிக்கு பொறுப்பான சுகாதார பரிசோதகருக்கு முறைப்பாடு கிடைத்ததுள்ளது.

பழுதடைந்த கோழி இறைச்சி

கொழும்பில் பிரபல தனியார் உணவகத்தில் பழுதடைந்த கோழி இறைச்சி: சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை - | Spoiled Kfc Chicken In Colombo Rajagiriya

இதனையடுத்து, குறித்த விற்பனை நிலையத்திற்கு விரைந்து சென்று பழுதடைந்த கோழி இறைச்சியை அதிகாரிகள் அப்புறப்படுத்தியுள்ளனர்.

மேலதிக விசாரணைகளுக்காக கோழியின் மாதிரி மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது எனவும் இதன் முடிவு வெளியாவதற்கு 10 நாட்கள் செல்லலாம் எனவும் பொது சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.