IMF இன் உதவி பாகிஸ்தானுக்கு கட்டாயமல்ல: இஷாக் டார் தெரிவிப்பு

Sri Lanka Pakistan IMF Sri Lanka
By Fathima Jun 16, 2023 08:50 PM GMT
Fathima

Fathima

பாகிஸ்தானுக்கான கடன் தடைப்பட்டமைக்கு பூகோள அரசியல் பின்னால் இருப்பதாக பாகிஸ்தான் நிதியமைச்சர் இஷாக் டார் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையைப் போல பாகிஸ்தான் கடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும் என்று உலகளாவிய நிறுவனங்கள் விரும்புகின்றன.

IMF இன் உதவி பாகிஸ்தானுக்கு கட்டாயமல்ல: இஷாக் டார் தெரிவிப்பு | Speech About Imf Pakistan Finance Minister

நிதி தொடர்பான செனட்டின் நிலைக்குழு முன் சாட்சியமளித்த இஷாக் டார், சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்புப் பொதி இருந்தாலும் இல்லாவிட்டாலும், நாடு தனது கடமைகளை நிறைவேற்றும்.

பாகிஸ்தான் வங்குரோத்து அடையாது

ஒன்பதாவது மறுஆய்வுக்குப் பின்னர், தேவையற்ற கடன் தாமதத்திற்கு சர்வதேச நாணய நிதியத்தால் எந்தக் காரணமும் கூறப்படவில்லை.

எனினும் சர்வதேச நாணய நிதியம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், பாகிஸ்தான், வங்குரோத்து அடையாது.

இதேவேளை 6 பில்லியன் உத்தரவாதத்திற்கான சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கை நியாயமற்றது என்றும், நிதியத்தின் தாமதத் திட்டம் ஒரு அரசியல் நிகழ்ச்சி நிரல் என  தெரிவித்துள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW