தேர்தல் ஆணையகம் விடுத்துள்ள விசேட கோரிக்கை
2025 ஆம் ஆண்டிற்கான அங்கீகாரம் கோரும் தகுதியுள்ள அரசியல் கட்சிகளிடமிருந்து தேர்தல் ஆணையகம் விண்ணப்பங்களை கோரியுள்ளது விண்ணப்பங்கள், 2025 பெப்ரவரி 28 முதல் மார்ச் 28 அன்று பிற்பகல் 3:00 மணி வரை ஏற்கப்படும்.
ஆணையகத்தின் கூற்றுப்படி, விண்ணப்பங்களை பதிவு செய்யப்பட்ட அஞ்சல் மூலம் சமர்ப்பிக்க வேண்டும் அல்லது கட்சியின் செயலாளரால் நேரில் ஒப்படைக்க வேண்டும்.
உறையில் "அரசியல் கட்சிகளை அங்கீகரிப்பதற்கான விண்ணப்பம் - 2025" என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டு ராஜகிரியவில் உள்ள தேர்தல் ஆணையகச் செயலகத்தில் உள்ள தேர்தல்கள் தலைவருக்கு முகவரியிடப்பட வேண்டும்.
காலக்கெடு
காலக்கெடுவுக்குப் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது.
தகுதியை பெற, கட்சிகள் கட்சி யாப்பு, குறைந்தது ஒரு பெண்ணை உள்ளடக்கிய நிர்வாகிகளின் பட்டியல், கடந்த நான்கு ஆண்டுகளாக கணக்காய்வு செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைகள், தற்போதைய கொள்கை அறிக்கை மற்றும் அதே காலகட்டத்தில் அரசியல் நடவடிக்கைக்கான சான்றுகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட நகல்களை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவங்களை www.elections.gov.lk இல் பதிவிறக்கம் செய்யலாம் அல்லது மாவட்டத் தேர்தல் அலுவலகங்களிலிருந்து பெறலாம்.
மேலும் விபரங்களுக்கு, விண்ணப்பதாரர்கள் ஜனவரி 21, 2022 திகதியிட்ட வர்த்தமானி எண் 2263/23 ஐப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.