இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க விசேட வாகனங்கள் தயாரிப்பு
Sri Lanka Army
Colombo
Ranil Wickremesinghe
By Fathima
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத செயற்பாடுகளை தடுப்பதற்காக ஐடியல் மோட்டார் நிறுவனத்தினால் உள்நாட்டில் மூன்று விசேட வாகனங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த வாகனங்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கையளிக்கப்பட்டது.
கடலோர மற்றும் குளம் சார்ந்த பகுதிகள் மற்றும் எந்த கரடுமுரடான நிலப்பரப்பிலும்(Combat All Terrain Vehicle) கடற்படை நடவடிக்கைகளுக்கு இலகுவாகப் பயன்படுத்தக்கூடிய வகையில் இந்த வாகனங்கள், தயாரிக்கப்பட்டுள்ளன.
தற்போது இலங்கை கடற்படையின் பொறுப்பில் உள்ள இந்த வாகனங்களின் பயன்பாடுகள் குறித்து ஜனாதிபதி முன்னிலையில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


