நாளை முதல் நடைமுறைக்கு வரும் விசேட போக்குவரத்து திட்டம்
காலி (Galle) வீதி உள்ளிட்ட பல கொழும்பு வீதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த போக்துவரத்து திட்டமானது நாளை (07) முதல் நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸார் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை பம்பலப்பிட்டி போரா பள்ளிவாசல் மற்றும் இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ள போரா சமூகத்தின் வருடாந்திர ஆன்மிக மாநாடு ஒன்று இடம்பெறவுள்ளது.
விசேட போக்குவரத்து திட்டம்
இதனை முன்னிட்டே இந்த விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும், குறித்த மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 15,000 பேர் பங்கேற்க உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் |