ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான சமூக ஊடக கருத்துக் கணிப்புகளை இடைநிறுத்த விசேட வேலைத்திட்டம்
ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து சமூக ஊடகங்கள் ஊடாக நடத்தப்படும் கருத்துக் கணிப்புகள் மற்றும் மக்கள் கருத்துக் கணிப்புகளை இடைநிறுத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சமூக ஊடகங்கள் ஊடாக நடத்தப்படும் கருத்துக்கணிப்புகள் மூலம் சில வேட்பாளர்களுக்கு பாரபட்சம் ஏற்படக்கூடும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த கணக்கெடுப்புகளை நடத்தும் சமூக ஊடக ஆர்வலர்களை அடையாளம் காண இந்த நாட்களில் ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
கருத்துக் கணிப்பு
ஆய்வுக்குப் பிறகு, கருத்துக் கணிப்புகள் மற்றும் கணக்கெடுப்புகளை நிறுத்துவது எப்படி என்பது குறித்து ஆலோசிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மின்னணு அல்லது அச்சிடப்பட்ட ஊடகங்கள் மூலம் நடத்தப்படும் கணக்கெடுப்புகளை எளிதாக நிறுத்த முடியும் என்றாலும், சமூக ஊடகங்கள் மூலம் நடத்தப்படும் இந்த கணக்கெடுப்புகளை நிறுத்துவது கடினம் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |