ரமழான் பெருநாளை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்
புனித ரமழான் பெருநாளை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இலங்கை வாழ் முஸ்லிம்கள் இன்றைய தினம் புனித ரமழான் பெருநாளை கொண்டாடுகின்றனர்.
பாதுகாப்பு கடமைகளுக்காக பொலிஸார் உள்ளிட்ட 7350 பேர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
இதன்படி, 5580 பொலிஸ் உத்தியோகத்தர்கள், 510 விசேட அதிரடிப்படையினர் மற்றும் 1250 விசேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
நாட்டின் அனைத்து பள்ளிவாசல்களையும் சேர்ந்த மௌவிமாருடன் கலந்துரையாடி பொலிஸ் பிரிவுகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாடு முழுவதிலும் காணப்படும் 3203 இஸ்லாமிய பள்ளிவாசல்களில் ரமழான் பெருநாள் தொழுகை நடைபெறும் 2453 பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.