இலங்கையில் ஒரே நாளில் நூற்றுக்கணக்கானோர் கைது! பொலிஸ் வெளியிட்ட தகவல்

Sri Lanka Police Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Police Investigation Crime
By Rakshana MA May 12, 2025 12:30 PM GMT
Rakshana MA

Rakshana MA

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 360 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (11) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, சந்தேகநபர்கள் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பேருவளையில் பெண்ணின் தாக்குதலால் மரணமடைந்த நபர்

பேருவளையில் பெண்ணின் தாக்குதலால் மரணமடைந்த நபர்

சுற்றிவளைப்பு நடவடிக்கை 

அதன்படி, ஹெரோயின் போதைப்பொருளுடன் 114 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 141 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 100 பேரும், கஞ்சா செடிகளுடன் 05 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் ஒரே நாளில் நூற்றுக்கணக்கானோர் கைது! பொலிஸ் வெளியிட்ட தகவல் | Special Round Up Operation In Sri Lanka

இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 204 கிராம் 696 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 162 கிராம் 130 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், 06 கிலோ 933 கிராம் 474 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளும், 31454 கஞ்சா செடிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

அரசு ஊழியர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு முன்னெடுப்பு

அரசு ஊழியர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு முன்னெடுப்பு

மின்கட்டண அதிகரிப்பு குறித்து சஜித் வெளியிட்ட அறிவிப்பு

மின்கட்டண அதிகரிப்பு குறித்து சஜித் வெளியிட்ட அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW