அமைச்சர் உள்ளிட்ட பதவிகளில் இல்லாதோருக்கும் விசேட பாதுகாப்பு! ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோர் கடமையில்

Parliament of Sri Lanka Sri Lanka Politician Sri Lanka
By Fathima Jun 06, 2023 09:21 AM GMT
Fathima

Fathima

அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கும் விசேட பிரமுகர்களுக்கான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.  

இதற்காக 5,400 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அறிக்கையொன்றை கோரியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கு ஏற்ப தேவையான மாற்றங்களை மேற்கொள்வதாகவும் அமைச்சர் டிரான் அலஸ் மேலும் குறிப்பிட்டார்.