யுக்திய நடவடிக்கைக்கு பழிவாங்கும் செயலாக மண்டைதீவு பொலிஸ் காவலரண் மீது தாக்குதல்

By Madheeha_Naz Jan 11, 2024 10:40 AM GMT
Madheeha_Naz

Madheeha_Naz

பொலிஸாரால் முன்னெடுக்கப்படும் யுக்திய நடவடிக்கைக்கு பழிவாங்கும் செயலாகவே மண்டைதீவு பொலிஸ் காவலரண் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் - மண்டைதீவு பகுதியில் உள்ள பொலிஸ் காவலரண் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டது.

குறித்த சம்பவம் புதன்கிழமை இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. நான்கு முறை பெற்றோல் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டது.

ஊர்காவற்துறை பொலிஸார்

யுக்திய நடவடிக்கைக்கு பழிவாங்கும் செயலாக மண்டைதீவு பொலிஸ் காவலரண் மீது தாக்குதல் | Special Police Action Jaffna

சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டு ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். ஊர்காவற்துறை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

சம்பவம் தொடர்பாக தடயவியல் பொலிஸாரும் பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். அண்மையில் போதைப்பொருளுடன் மண்டைதீவில் ஒருவர் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட்ட நிலையில் அதற்கு பழிவாங்கவே தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.