மஹ்ஷரின் மண் ஷாம்..!
நபி (ஸல்) ஒரு நாள் கூறினார்கள் : யா அல்லாஹ் எங்களுடைய ஷாமில் எங்களுக்கு பரக்கத் செய்வாயாக என்று! அந்த நேரம் ஷாம் எமது கைகளில் இல்லை. கிறிஸ்தவர்களின் கைகளில் இருந்தது. இருப்பினும் தொடர்ந்தும் மூன்று முறை ஷாம் இற்கு பரக்கத் செய் என துஆ கேட்டார்கள்.
தொடர்ந்தும் பெரிய பெரிய இமாம்கள் பிரச்சாரம் செய்த இடம் ஷாம். இப்படியான பரக்கத் பொருந்திய இடம் அது..!
இப்படியெல்லாம் ஷாமை பற்றி கூறிய ரஸூலுல்லாஹ் ஒரு விரலை நீட்டி சொன்னார்கள் இது தான் கடைசி நாளுக்குரிய அடையாளம். இது தான் மஹ்ஷரின் பூமி என சுட்டிக்காட்டினார்கள்.
மஹ்ஷரின் மைதானமல்ல! மறுமை நாள் நெருங்கும் போது, சுற்றி வர நெருப்பு நெருக்கும் போது மக்கள் ஒன்று சேர்க்கப்படும் இடம் தான் ஷாம்.
யுத்தங்களுக்கு இடையிலான முடிச்சுக்கள்
தற்போது நடக்கும் யுத்தத்திற்கும் அப்போது ரஸூலுல்லாஹ் சொன்ன வார்த்தைகளுக்கும் என்ன முடிச்சு போடலாம்?
அதிகளவான சிறப்புக்கள் பொருந்திய இந்த ஷாமில் இழப்புகளும், அழிவுகளும், பிரச்சினைகளும் உண்டாகும் போது ஒவ்வொரு முஹ்மீனின் உள்ளமும் வேதனையடைய வேண்டும். இது அனைவரிற்குமான சோதனை என்ற சிந்தனை உருவாக வேண்டும்.
மேலே குறிப்பிட்டவாறு ரஸூலுல்லாஹ் மரணித்து 4வருடங்களின் பின்னரே ஷாம் முஸ்லிம்களால் கைப்பற்றப்பட்டது.
இங்கே குறிப்பிட்டு கூறவேண்டிய ஒரு விடயம் என்ன தெரியுமா? 4 வருடங்களுக்கு முன்னர் நபியால் கேட்கப்பட்ட துஆ "எங்களின் ஷாமிற்கு பரக்கத் செய் என்று” ஆனால் அது ஹிஜ்ரி 15ஆம் ஆண்டு உமர் பின் கத்தாப் (ரழி) அவர்களின் காலத்தில் அவர்களினால் கைப்பற்றப்பட்டது.
இஸ்லாத்தில் அதிகளவான யுத்தங்களை பற்றி கேள்வியுற்றிருப்போம். அதில் பத்ர் யுத்தத்தில் முஸ்லிம்கள் வெறும் 300 எதிரிப்படை 1000. ஆயினும் அல்லாஹ் அதில் முஸ்லிம்களுக்கு வெற்றியை கொடுத்தான்.
அத்துடன் அஹ்ஸாப் யுத்தத்தை பொருத்தவரையில் எதிரிப்படையினர் கிட்டத்தட்ட பத்தாயிரம் பேர் ஆனால் மதீனாவிலுள்ள மொத்த சனத்தொகை சுமார் 3000 பேர், இருப்பினும் ஸஹாபா ஒருத்தரின் ஆலோனைக்கு அமைய போர் வெற்றி கொள்ளப்பட்டது.
அதே போல தான் தற்போது எமது புனித பூமியில் யுத்தங்கள் முன்னெடுக்கப்பட்டு முஸ்லிம்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்த தருணத்தில் அல்லாஹ்வின் உதவிகளை தவிர வேறோன்றும் வரப்போவதில்லை.
ஆகவே தற்கால முஸ்லிம்கள் இது தொடர்பில் தங்களின் தேடல்களையும் அறிவினையும் இன்னும் வளர்த்துக் கொண்டு அனைவரினதும் ஈமானை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய காலகட்டத்திலுள்ளோம்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |