ஜனாதிபதி தேர்தல் களத்தில் விஜயதாச!
புதிய இணைப்பு
2024ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தானும் போட்டியிடவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
விசேட ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்
முதலாம் இணைப்பு
நாட்டு மக்களுக்கு இன்றையதினம் ஒரு நற்செய்தியை வழங்கவுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு விவகார அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெறும் விசேட செய்தியாளர் சந்திப்பில் குறித்த அறிவிப்பை வெளியிடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல்
இதன்போது, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பதை அமைச்சர் இன்று அறிப்பார் என எதிர்ப்பார்க்கப்படகிறது.
மேலும், அமைச்சர் பதவியில் இருந்து விலகுமாறு ஜனாதிபதியினால் முக்கிய அமைச்சருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் தரப்பில் பேசப்படுகின்ற நிலையில், விஜயதாச ராஜபக்சவின் செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பில் பேசப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னர் சஜித் பிரேமதாச, அநுர குமார திசாநாயக்க, திலித் ஜயவீர, சரத் பொன்சேகா ஆகியோர் தாங்கள் ஜனாதிபதி வேட்பாளர்கள் என்று அறிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |