அந்நிய செலாவணியில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு: மத்திய வங்கி அறிக்கை

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Sri Lanka Economic Crisis Economy of Sri Lanka Dollars
By Madheeha_Naz Oct 07, 2023 04:58 AM GMT
Madheeha_Naz

Madheeha_Naz

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களின் மூலமாக நாட்டிற்கு கிடைத்துள்ள அந்நிய செலாவணி வருமானத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்

கடந்த செப்டம்பர் மாதம் இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களின் பணவனுப்பல்கள் 482.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

அந்நிய செலாவணியில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு: மத்திய வங்கி அறிக்கை | Special Notification From Central Bank

இதேவேளை, இவ்வருடத்தின் கடந்த செப்டம்பர் மாதம் வரையிலான பணவனுப்பல்கள் 4,345.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

2022 ஜனவரி - செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 68.8% அதிகரிப்பு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.