உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

Sri Lanka
By Mayuri Sep 30, 2024 04:45 AM GMT
Mayuri

Mayuri

2023/2024 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி செலுத்த வேண்டிய ஒவ்வொரு நபரும் வரியையும் இன்றைக்குள் (30) செலுத்த வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவரேனும் வரியை செலுத்தத் தவறினால் அல்லது தாமதப்படுத்தினால், அவர் சட்டத்தின்படி அபராதம் மற்றும் வட்டி விதிப்புக்கு உட்படுத்தப்படுவார் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நிலுவையிலுள்ள வரிகள்

மேலும், எந்தவொரு நபரும் செலுத்த வேண்டிய வரிகள் நிலுவையில் இருந்தால், அவை அனைத்தும் அக்டோபர் 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன் செலுத்தப்பட வேண்டும்.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு | Special Notice To Tax Defaulters

அன்றைய திகதிக்குப் பின்னரும் செலுத்தப்படாத வரிகள் இருப்பின் அவற்றை மீளப்பெறுவதற்கு உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் பிரகாரம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

1944 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக இது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW