வாகனக் கொள்வனவில் ஈடுபடுவோருக்கு விசேட அறிவிப்பு

By Mayuri Jan 22, 2024 11:29 AM GMT
Mayuri

Mayuri

வாகனத்தைக் கொள்வனவு செய்து 14 நாட்களுக்குள் அதன் உரிமையை கொள்வனவாளர் தமக்கு மாற்றாவிட்டால் 2000 ரூபாய் வரையில் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து ஆணையாளர் நிஷாந்த அனுருத்த குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வாகனங்களின் உண்மையான பதிவு செய்யப்பட்ட உரிமையாளரை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வாகனத்தினைக் கொள்வனவு செய்யும் சிலர் நீண்ட காலமாக வாகனத்தின் உரிமையை மாற்றாமல் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையிலேயே வேறு ஒருவரிடமிருந்து வாகனத்தைக் கொள்வனவு செய்தால் அதை உடனடியாகவே கொள்வனவாளர் தனது பெயரில் பதிவு செய்ய வேண்டும் எனவும் போக்குவரத்து ஆணையாளர் நிஷாந்த அனுருத்த அறிவுறுத்தியுள்ளார்.