இந்திய முக்கியஸ்தர்களுக்கும் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டுக் குழுவிற்கும் இடையே விசேட சந்திப்பு

Ampara Sri Lanka Eastern Province
By Rukshy Jul 04, 2024 05:15 AM GMT
Rukshy

Rukshy

அம்பாறை சாய்ந்தமருது பகுதியில் இலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் 2024 ஆம் ஆண்டுக்கான உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு தொடர்பான இந்திய அதிதிகளுடனான விசேட சந்திப்பும் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பானது நேற்று (03) சாய்ந்தமருது பகுதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.

பொன்னாடை போர்த்தி கௌரவிப்பு

இந்த நிகழ்வானது ஏ.எல்.அன்சார் தலைமையில் நடைபெற்றதுடன் சிறப்பு அதிதியாக இக்ரா ஜலால் மற்றும் ஏனைய பிரதம அதிதிகளாக இந்தியாவின் முன்னாள் மாநில சட்ட சபை உறுப்பினர் கே.ஏ.எம் முஹம்மட் அபூபக்கர், இந்தியா தமிழ்நாடு சிரேஸ்ட ஊடகவியலாளர் எம்.ஏ.சாஹூல் ஹமீட், இந்தியா தமிழ்நாடு பகுதியை சேர்ந்த எம்.ரைய்னார் முஹம்மட் கடாபி, முஸ்லிம் மீடியா போரத்தின் பொதுச்செயலாளர் சாதிக் சிஹான், சிரேஸ்ட ஊடகவியலாளர் ஜெஸ்மின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இந்திய முக்கியஸ்தர்களுக்கும் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டுக் குழுவிற்கும் இடையே விசேட சந்திப்பு | Special Meeting Indian Dignitaries

குறித்த நிகழ்வில் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு தொடர்பாக ஆராயப்பட்டதுடன் பல்வேறு உதவிகளை இந்தியாவில் இருந்து பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக இந்திய அதிதிகள் இதன்போது குறிப்பிட்டனர்.

இந்திய முக்கியஸ்தர்களுக்கும் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டுக் குழுவிற்கும் இடையே விசேட சந்திப்பு | Special Meeting Indian Dignitaries

அத்துடன் மாநாடு தொடர்பாக இந்தியாவுக்கு வருகை தருமாறு இந்திய அதிதிகள் தெரிவித்துள்ளதுடன் மாநாடு வெற்றி பெற பல்வேறு ஒத்துழைப்புக்களை வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.

இதன் போது இலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்திய அதிதிகள் உள்ளிட்ட ஏனைய அதிதிகளுக்கு பொன்னாடை போர்த்தப்பட்டு நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிகப்பட்டது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGallery