எலிக்காய்ச்சல் பரவலை தடுக்க விசேட நடவடிக்கை

Sri Lanka Ministry of Health Sri Lanka
By Mayuri Jul 01, 2024 06:50 AM GMT
Mayuri

Mayuri

நாட்டில் எலிக்காய்ச்சல் நோய் பரவும் ஆபத்தான இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள 17 நிர்வாக மாவட்டங்களிலுள்ள பாடசாலைகள் மற்றும் வீடுகளுக்குச் சென்று நோய்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதார அமைச்சு அறிவுறுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (01) முதல் சுகாதார அமைச்சினால் கிட்டத்தட்ட 1,200 சுகாதார பரிசோதகர்கள் மற்றும் 3,500 குடும்ப சுகாதார செவிலியர்கள் பணிக்கு அமர்த்தப்படுவார்களென தெரிவிக்கப்பட்டுள்ளது.

எலிக்காய்ச்சல் நோயாளர்கள்

இந்த வருடம் நாடு முழுவதும் சுமார் 5,000 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எலிக்காய்ச்சல் பரவலை தடுக்க விசேட நடவடிக்கை | Special Measures To Prevent Spread Of Rat Fever

மேலும் மருந்தை உட்கொள்ளாத, எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 100 நோயாளிகள் ஆண்டுதோறும் உயிரிழப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW