கிழக்கில் முஸ்லிம் பாடசாலைகளுக்கான விசேட விடுமுறை!
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கிலுள்ள முஸ்லிம் பாடசாலைகளுக்கு நாளை 27ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த விடுமுறைக்கான அனுமதியினை கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஐயந்தலால் ரத்னசேகர வழங்கியுள்ளதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் சுஜாத்தா குலேந்திரகுமார் அறிக்கையொன்றின் ஊடாக தெரிவித்துள்ளார்.
இந்த விடுமுறையானது இன்றும்(26) நாளையும்(27) நடைமுறையிலிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை
மேலும் குறித்த அறிக்கையில் அவர் தெரிவித்ததாவது, க.பொ.த (உ/த) பரீட்சை நிலையங்களாக அமையாத அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் இன்றும், நாளையும்(27) விடுமுறை வழங்கப்படுகின்றது.
தொடர்ந்தும் பரீட்சை நிலையங்களாக அமையாத கிழக்கு மாகாண முஸ்லீம் பாடசாலைகளுக்கான 3ம் தவணை கல்வி நடவடிக்கைகள் தொடர்ந்தும் எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பமாகும்.
அத்துடன் கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்து கொண்டிருக்கின்ற முஸ்லிம் பாடசாலைகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், அதிபர்கள், கல்விசாரா அதிகாரிகளுக்கு ஏற்படக் கூடிய அசெளகரியங்களை தவிர்ப்பதற்காகவே இவ்விடுமுறை வழங்கப்படுகின்றது என குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |