கல்முனை சட்டத்தரணிகள் சங்கம் ஏற்பாட்டில் விசேட இப்தார் நிகழ்வு

Kalmunai
By Farook Sihan Mar 30, 2023 11:14 AM GMT

கல்முனை சட்டத்தரணிகள் சங்கம் ஏற்பாடு செய்த விசேட இப்தார் நிகழ்வு சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி எம்.ஐ. ரைசுல் ஹாதி தலைமையில் இடம்பெற்றுள்ளது.

மருதமுனை தனியார் விடுதியில் நேற்று  (29.03.2023) இந்த இப்தார் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

குறித்த விசேட இப்தார் நிகழ்வில் நோன்பு திறக்கப்பட்டு பிரார்த்தனை இடம்பெற்று இரவு உணவுடன் சிறப்பாக நிறைவடைந்துள்ளது.

கல்முனை சட்டத்தரணிகள் சங்கம் ஏற்பாட்டில் விசேட இப்தார் நிகழ்வு | Special Iftar Event Organized By Kalmunai

இதில் கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜெயராம் ட்ரொக்ஸி, கல்முனை மாவட்ட நீதிபதி ஏ.எம் முஹம்மட் றியால், கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன், கல்முனை காதி நீதவான் சிரேஷ்ட சட்டத்தரணி எப்.​​எம்.அமீருல் அன்சார் மௌலானா உட்பட கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஆண் மற்றும் பெண் சட்டத்தரணிகள் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.