அரிசிக்கான நிர்ணய விலை தொடர்பில் விசேட வர்த்தமானி

New Gazette Economy of Sri Lanka Rice
By Dharu Dec 10, 2024 01:17 AM GMT
Dharu

Dharu

அரிசிக்கான நிர்ணய விலை தொடர்பில் அரசாங்கம் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டத்தின் 20(5) ஆம் பிரிவின் கீழ் உரித்தளிக்கப்பட்ட அதிகாரங்களின் கீழ் செயற்படுகின்ற பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையானது, கீழே தரப்பட்டுள்ள உள்நாட்டு அரிசி வகைகளுக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள ஆகக் கூடுதலான விலைக்கு மேலாக உற்பத்தியாளர், தயாரிப்பாளர், வழங்குநர், விநியோகஸ்தர் அல்லது வியாபாரி எவரும் விற்பனை செய்யவோ, வழங்கவோ, விற்பனைக்கு விடவோ அல்லது விற்பனைக்கு வெளிப்படுத்தவோ, விற்பனைக்காக காட்சிப்படுத்தவோ முடியாதென கட்டளையிடுகின்றது.

இதன்படி உள்நாட்டு அரிசிக்கு உச்சபட்ச விலையை நிர்ணயம் செய்து இவ்வாறு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி அரிசிக்கான விலை நிர்நயம் பின்வருமாறு வெளியிடப்பட்டுள்ளது.


GalleryGallery