நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது
Mahinda Yapa Abeywardena
Sri Lanka
Sri Lanka Government Gazette
By Fathima
எதிர்வரும் சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகளின் 16 ஆம் நிலையியற் கட்டளைக்கு அமைய சபாநாயகர் சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு நாடாளுமன்றத்தை கூட்டவுள்ளார்.